மதரீதியான பேரணிகள், ஒலிப்பெருக்கிகள் தொடர்பான மோதல் வலுத்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச அரசு இதற்கான வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
அனுமதியில்லாமல் எந்த மதப் பேரணியையும் நடத்தக்கூடாது என்றும் ஒலிபெருக்கிகள் அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் அந்த ஒலிபெருக்கியின் ஓசை வழிபாட்டுத் தலத்தின் வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் மசூதியில் அசான் அல்லது கோவில்களில் ஆரத்தி செய்யும்போது அதன் ஓசை வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியில் கேட்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், சாலையில் போக்குவரத்தை பாதிக்கும் எந்த வித மத ரீதியான பேரணிக்கும் இனி காவல்துறையின் அனுமதி கிடையாது என்றும் யோகி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.