புதுடில்லி : ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுதும் உள்ள மருத்துவ மையங்களில் ஒரே நாளில் 3.5 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2017ல் துவக்கி வைத்தார். இதன் கீழ் 2018ல் நாடு முழுதும் 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நான்காவது ஆண்டையொட்டி 16 முதல் 22ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன் விபரம்:
நேற்று முன்தினம் மட்டும் 464 வட்டாரங்களில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இதைத் தவிர 64 ஆயிரம் பேருக்கு சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் 17 ஆயிரம் பேருக்கு சிறப்பு சுகாதார தங்க அட்டைகள் வழங்கப்பட்டன.ஏப்.,16ம் தேதி மட்டும் ‘ஆன்லைன்’ வாயிலாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement