சென்னை: இந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என TNPSC அறிவித்துள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் TNPSC இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என TNPSC ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.