சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள அமைய உள்ள வணிக வளாகத்திற்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை, உலகில் மிகவும் நீளமான கடற்கரை ஆகும். இந்தக் கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைய உள்ள வணிக மையத்திற்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பட்டினப்பாக்கத்தில் கடற்கரை சார்ந்த பொழுதுபோக்கு அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், இதற்கான நிதி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் போன்று சென்னை நந்தனத்தில் வீட்டு வசதி வாரியம் இடத்தில் ஒரு வர்த்தக மையம் அமைக்கப்படும் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.