மேற்கு வங்கத்தில் குவியும் முதலீடுகள்.. அதானி, ஜேஎஸ்டப்யூ குழுமங்களின் சூப்பர் அறிவிப்புகள்..!

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலபதிர்களில் ஒருவர் கெளதம் அதானி. இவர் தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு முதலீடுகளை தொடர்ந்து பல்வேறு துறைகளில் அறிவித்து வருகின்றார்.

இதற்கிடையில் தற்போது மேற்கு வங்கத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி அறிவித்துள்ளார்.

பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சி மாநாடு 2022ல், அதானி குழுமத்தின் முதலீடுகள் உலகத் தரம் வாய்ந்த துறைமுக உள்கட்டமைப்புகள் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள், டிஜிட்டல் தொழில் நுட்பங்கள், கிடங்குகள் மற்றும் லாகிஸ்டிக்ஸ் பூங்காக்கள் என இருக்கும்.

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை.. இந்தியா சந்தித்து வரும் சவால்கள்.. வளர்ச்சி கணிப்பை குறைத்த IMF!

ரூ.10,000 கோடிக்கு மேல் முதலீடு

ரூ.10,000 கோடிக்கு மேல் முதலீடு

அதானி குழுமத்தின் அதானி வில்மர் தற்போது ஹால்டியாவில் ஒரு சமையல் எண்ணெய் ஆலையைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் எங்களது முதலீடு வங்காளத்தில் 10,000 கோடி ரூபாயினை தாண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து இங்கு நாங்கள் விரிவாக்கம் செய்வோம். உலகத்தரம் வாய்ந்த பசுமை ஆற்றல் உள்கட்டமைப்புகளை உருவாக்குவோம் என அதானி தெரிவித்துள்ளார்.

இதுவே முதல் முறை

இதுவே முதல் முறை

இதற்கு முன்பாக சர்வதேச அளவில் அதிகளவில் கவனம் செலுத்தி வந்த அதானி, தற்போது மாநில வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

தாஜ்பூர் ஆழ்கடல் துறைமுகத்திற்கான மிகப்பெரிய ஏலதாரர் அதானி ஆகும். எனினும் மாநிலம் இன்னும் அதானியை L1 ஏலதாரராக அறிவிக்கவில்லை. அதானி குழுமத்தின் சிறந்ததை செய்ய நான் உறுதியளிக்கிறேன்.

வேலை வாய்ப்பு
 

வேலை வாய்ப்பு

உள்கட்டமைப்பில் எங்களின் அனுபவத்தினை வைத்து சிறப்பாக உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். இதன் மூலம் மேற்கு வங்கத்தின் உள்கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வோம்.

அதானி குழுமத்தின் இந்த முதலீட்டின் மூலம் 25000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் எனலாம்.

ஜேஎஸ்டபள்யூ குழுமம்

ஜேஎஸ்டபள்யூ குழுமம்

இதே பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சி மாநாடு 2022ல்,ஜேஎஸ்டபள்யூ குழுமம் 900MW ஹைடெல் பவர் புராஜக்ட் திட்டத்தினை மேற்கு வங்கத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜிண்டால் 2019லேயே ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது இது குறித்தான மறு அறிவிப்பினை அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani group commits to invest Rs.10,000 crore in west Bengal

Adani group commits to invest Rs.10,000 crore in west bengal/மேற்கு வங்கத்தில் குவியும் முதலீடுகள்.. அதானி, ஜேஎஸ்டப்யூ குழுமங்களின் சூப்பர் அறிவிப்புகள்..!

Story first published: Wednesday, April 20, 2022, 19:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.