ரஷ்யாவிற்கு சீனா வழங்கும் ஆதரவு குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படும்.. அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் பேட்டி

ரஷ்யாவிற்கு சீனா வழங்கும் ஆதரவு குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் Ned Price தெரிவித்தார்.

வாஷிங்டனில் பேசிய அவர், இதுவரை ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை சீனா வழங்கியதாக அமெரிக்காவுக்குத் தகவல் இல்லை என்றார்.

இருந்தாலும் ரஷ்யாவிற்கு சீனா வழங்கும் ஆதரவு குறித்து மிகவும் கவனமாக கண்காணிக்கப்படும் என்றும் Ned Price தெரிவித்தார்.

உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து சீனா சொந்தமாக முடிவு எடுக்கலாம் என்றும் அவர் கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.