நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 வயது குழந்தை, கழுத்தில் இருந்த ருத்ராட்சம் அழுத்தி பரிதாபமாக உயிரிழந்தது.
அக்கலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபி, பிரியா தம்பதியரின் 3-வது குழந்தையான முகிலன், உறங்கி கொண்டிருந்தபோது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சம் சுவாசக் குழாயை அழுத்தி உயிரிழந்தாக கூறப்படுகிறது.
குழந்தையின் கழுத்தில் ருத்ராட்சம் அழுத்தியதற்கான தடயம் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.