ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பஹாரி டோலாவை சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், தாங்கள் லாட்டரி மூலம் ரூ.25 லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் வென்றுள்ளதாகவும், பரிசைப் பெற தொடர்புக் கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்துள்ளது.
இதையடுத்து, அந்த பெண் மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புக் கொண்டு பரிசுத் தொகை விவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, ரூ.3.45 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் பரிசுத் தொகை கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த பெண் ரூ.25 லட்சம் பணம் கிடைக்க இருப்பதை நம்பி ரூ.3.45 லட்சம் பணத்தை அவர்கள் சொந்த வங்கி கணக்கின் மூலம் செலுத்தியுள்ளார். இதன் பிறகு, அந்த நபர்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காததை அடுத்து, சந்தேகமடைந்த பெண் போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்.. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின்