சென்னை:
தமிழக சட்டசபை
யில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் பேசும் போது,
ஆற்காடு தொகுதி புங்கனூர் ஊராட்சி எல்லாசி குடிசை, வரதேசி நகர் மற்றும் விளாபாக்கம் பேரூராட்சி, சின்னதக்கை ஆகிய பகுதிகளில் பகுதி நேர ரேசன் கடைகள் அமைக்க அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.
இதே போன்று எம்.எல்.ஏக்கள் அருள், உதயகுமார், நீலமேகம், சிவக்குமார், உள்ளிட்டோரும் ரேசன் கடை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அப்போது வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேசன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ரேசன் கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்போது பகுதி நேரமாக செயல்படும் 700 கடைகளும் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 500 கடைகள் வீதம் கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.