றம்புக்கணையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (20) காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றினார்.
இதன்போது றம்புக்கணை சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் சார்பில் அரசாங்கம் கவலை தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினார்கள்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் சபையில் கூச்சல் நிலை ஏற்பட்டது.இதனால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
றம்புக்கணை சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.
றம்புக்கணை சம்வபம் அங்கிருந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பரவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் இந்த சம்பவம் தொடர்பில் கட்சி தலைவர்களின் கூட்டத்தை தனியாக நடத்தாமல் பாராளுமன்றத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.