வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ”கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு வளரும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவில் சர்வதேச நிதியம் சார்பில், ‘ஜி – 20 வளரும் சந்தைப் பொருளாதாரங்கள்’ மாநாடு நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: கொரோனா தாக்கத்தை அடுத்து வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை விரைந்து மீட்பது முக்கியம். எதிர்காலத்தில் இது போல் ஏற்படும் இடர்பாடுகளை சமாளித்து அவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதும் அவசியமாகும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, வளரும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உணவு, எரிசக்தி ஆகிய துறைகளுடன் சர்வதேச நிதிக் கட்டுப்பாடுகள் போன்ற குறுகிய கால சவால்களையும் வளரும் நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.அதனால் சுற்றுச்சூழல், அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுடன் நிதியாதாரத்துடன் கூடிய எரிசக்திக்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதும் அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement