மைனே,-அமெரிக்காவின் மிகச்சிறிய தீவில் அமைந்துள்ள உலகின் தனிமை வீடு, 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
அமெரிக்காவின் கடலோர மாகாணமான மைனேவில், மிகச்சிறிய, ஆள் அரவமற்ற டக் லெட்ஜஸ் தீவு அமைந்துள்ளது. இத்தீவில், 2009ல் 540 சதுர அடியில் ஒரு சிறிய வீடு கட்டப்பட்டது. இதில், ஒரு படுக்கை அறை மற்றும் குளியல் அறை மட்டுமே உள்ளது. இருப்பினும், அறையின் உள்புறம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த வீட்டில் தங்கு வோர், பிறர் தொந்தரவுஇல்லாமல் கடலின் அழகை முழுமையாக ரசிக்கலாம். இது ஆள் அரவமற்ற தீவில் இருப்பதால், உலகின் தனிமையான வீடு என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வீடு 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.
மைனே,-அமெரிக்காவின் மிகச்சிறிய தீவில் அமைந்துள்ள உலகின் தனிமை வீடு, 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.அமெரிக்காவின் கடலோர மாகாணமான மைனேவில், மிகச்சிறிய, ஆள் அரவமற்ற டக்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.