ரிலையன்ஸ்
நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில் மலிவான திட்டங்களை கொண்டிருக்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம், தற்போது JioFiber வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டங்களில் வரம்பற்ற டேட்டா, 14 ஓடிடி தளங்களின் பிரீமியம் அணுகல்கள் வரை பயனர்களுக்குக் கிடைக்கும். ஜியோ இந்த அதிரடி திட்டங்களை இரண்டு வகையில் பிரித்து வழங்குகிறது. வெறும் ரூ.100 அல்லது ரூ.200 செலுத்தி இந்த திட்டங்களின் பயனை அனுபவிக்கலாம்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், டிஸ்கவரி பிளஸ், ஜீ5, சோனி-லிவ், வூட் கிட்ஸ் போன்ற பிரபல ஓடிடி தளங்களின் அணுகல்கள் இந்த திட்டத்தில் அடங்கும். இரண்டு திட்டங்களில் பயனர்களுக்கு தேவையானதை, போஸ்பெய்ட் ஃபைபர் சந்தாவுடன் இணைத்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது, இந்த திட்டங்களை குறித்து விரிவாகக் காணலாம்.
புதிய OnePlus டிவி அறிமுகம் – இனி வீட்டிலேயே மினி தியேட்டர் அனுபவம்!
புதிய ஜியோ ஃபைபர் திட்டத்தின் அம்சங்கள்
முதலில் இந்த திட்டதில் புதிதாக இணையும், அதாவது புதிய போஸ்ட்பெய்ட் ஃபைபர் திட்டத்தில் இணையும் பயனர்களுக்கு சேவை மற்றும் நிறுவல் கட்டணத்தில் இருந்து சலுகை அளிக்கப்படுகிறது. ஒரு பைசா செலவில்லாமல், இந்த திட்டத்தை பயனர்கள் இணைந்து கொள்ள முடியும்.
போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டங்கள் ரூ.399 முதல் தொடங்குகிறது. இந்த கனெக்ஷனுடன் இன்டர்நெட் பாக்ஸ், செட்டாப் பாக்ஸ், கனெக்ஷன் உபகரணங்கள் ஆகியவை பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இவற்றின் மதிப்பு ரூ.10,000 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்துடன் ரூ.100 கூடுதலாகச் செலுத்தினால் 6 ஓடிடி தளங்களின் அணுகல்கள் கிடைக்கிறது. ரூ.200 செலுத்தினால் 14 ஓடிடி தளங்களை பயனர்கள் பயன்படுத்தலாம். கொடுக்கப்படும் ஓடிடி அணுகல் அனைத்தும் பிரீமியம் சேவை என்பது கூடுதல் சிறப்பு.
சும்மா ஒரு டீஸ்; பக்கா பிளானில் ரியல்மி – திகைத்து நிற்கும் சியோமி!
14 ஓடிடி தளங்களின் அணுகல்
இதில், Disney+ Hotstar, Sunnxt, Zee5, Sonyliv, Discovery+, Voot, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal+, Voot Kids, JioCinema போன்ற ஓடிடி தளங்கள் அடங்கும். ரூ.399 உடன் வெறும் 200 ரூபாய் செலுத்தினால், இந்த அனைத்து தளங்களின் பிரீமியம் அணுகல் கிடைக்கும்.
புதிய ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் திட்டமானது, ஏப்ரல் 22, 2022 முதல் செயல்பாட்டுக்கு வரும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பழைய ஜியோ ஃபைபர் பயனர்கள் MyJio செயலியின் மூலம் இந்த திட்டத்தை பெற முடியும்.
JioFiber திட்டத்தில் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் மை ஜியோ செயலியை ஸ்மார்ட்போனின் பதிவிறக்கம் செய்து, அதில் தொடர்பு எண் கொண்டு பதிவுசெய்து கொள்ள வேண்டும். பின்னர் திட்ட விவரங்களை அறிந்து, சாதாரண மொபைல் ரீசார்ஜ் போல ஆன்லைனில் பணத்தை செலுத்தி, திட்ட பயன்களை அனுபவிக்கலாம்.
ஜியோ செட்டாப் பாக்ஸ் அம்சங்கள்
Jio SetTop Box எந்த டிவியையும் ஸ்மார்ட் டிவியாக மாற்றுகிறது. Jio STB மூலம் பயனர்கள் திரைப்படங்களை ரசிக்கலாம், சேனல்கள், நிகழ்ச்சிகள், வலைத் தொடர்கள், விளையாட்டுகள் மற்றும் அவர்களுக்குப் பிடித்த OTT தளங்களை அணுகலாம்.
டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம் – போட்டி ஆப்ஸ்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஆஃபர்கள்!
குரல் உதவி: Jio STB குரல் தேடல் திறன்களைப் பயன்படுத்தி நீங்கள் பார்க்க வேண்டியவற்றைத் தேடலாம்டிவியில் யூடியூப்: இப்போது யூடியூப்பில் இருந்து உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் வீடியோவையும் பெரிய திரையில் கண்டு மகிழலாம்டிவியில் இணையத்தை அணுகவும்: JioStore இல் உள்ள பயன்பாடுகளைப் பயன்படுத்தி இணையத்தில் உலாவலாம்டிவி மூலம் வீடியோ அழைப்புகள்: JioFiber வீடியோ அழைப்பு சேவை மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்கலாம் டிவி சேனல்கள்: 15 மொழிகளில் 550+க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை அணுகலாம்ஆப்ஸ்: 300+க்கும் மேற்பட்ட செயலிகளின் அணுகலை பெறலாம் விண்ணப்பங்களைப் பெறுங்கள்மல்டிபிளேயர் கேம்கள்: ஜியோ கேம்ஸ் ஆப் மூலம் பெரிய திரை கேம்களை விளையாடலாம்டிவியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்: உங்கள் மொபைலில் உள்ள படங்களை பெரிய திரையில் கண்டு களிக்கலாம்.
லிங்கை க்ளிக் செய்து சர்வேயில் கலந்துக்கோங்க… கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்க!