நேட்டோ உறுப்புரிமை தொடர்பாக ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேட்டோவில் இணைவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இருதரப்பு வெளியுறவு அதிகாரிகள் மூலம் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்கள் எல்லா எச்சரிக்கைகளையும் பகிரங்கமாகவும் இருதரப்பு வெளியுறவு அதிகாரிகள் மூலமாகவும் வெளியிட்டுள்ளோம்.
இதுகுறித்து ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு தெரியும், அவர்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, நேட்டோ உறுப்புரிமை எதற்கு வழிவகுக்கும் என எல்லாவற்றையும் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என Maria Zakharova கூறினார்.
உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் நியோ-நாஜி குழு! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் நேட்டோவில் சேருவதற்கான அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்ததை அடுத்து, நேட்டோ உறுப்புரிமையை நாடலாமா என்பது குறித்த விவாதத்தை பின்லாந்து நாடாளுமன்றம் இன்று தொடங்கவுள்ளது.
தனது நாடு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யும் என்று பின்லாந்தின் பிரதமர் கூறினார்.
ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ உறுப்பினர் கோரிக்கையை சமர்ப்பிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.