உத்தரப் பிரதேசத்தில் காவல் கண்காணிப்பாளர் இல்லத்திற்கு அருகில் உள்ள ஹார்டுவேர் கடையில் கொள்ளையடித்த திருடன் சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் சா அண்டவுலியில் காவல் கண்காணிப்பாளர் ஒருவரின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஹார்டுவேர் கடையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவில் கடையை பூட்டி விட்டுச் சென்ற கடை உரிமையாளர் அன்ஷு சிங், மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த அனைத்து பணத்தையும் திருடன் எடுத்துச் சென்றதுடன், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
यूपी में अब चोर चोरी के बाद जश्न मना रहा है चंदौली में @chandaulipolice आपकी कोई ज़िम्मेदारी है क्या ? @adgzonelucknow pic.twitter.com/RTnNJdScEa
— Manoj KAKA (@ManojSinghKAKA) April 18, 2022
காவல் நிலையத்தில் புகாரளித்த அன்ஷு சிங் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது திருடன் செய்த சேட்டைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். முகத்தை மூடிக் கொண்டு கடைக்குள் நுழையும் திருடன், தனக்கு வேண்டியதை திருடியுள்ளார். அதன் பின் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஒன்றை பார்த்தபோது திடீரென நடனமாடி விட்டு, பின் பதுங்கிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வரும் நிலையில், கொள்ளையடித்த திருடன் நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM