அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் செயற்கையாக சுழலும் பிரமாண்ட சுழல் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 75 அடி அகலம் கொண்ட இந்த ராட்சச சுழல், கிழக்கு நாபா (Naba) பகுதியின் பள்ளத்தாக்கில் உள்ள மான்டிசெல்லோ அணையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை ‘நரகத்திற்கான வழி (Portal To Hell)’ மற்றும் ‘Glory Hole’ என்று அழைக்கின்றனர்.
1950களில் ஏரியில் உள்ள அளவுக்கு அதிகமான தண்ணீரை வெளியேற்ற திட்டங்கள் வகுத்தபோது பெரிய நம்பமுடியாத சுழல் போன்று வடிவமைத்து ஏரியில் 4.7 மீட்டருக்கு மேல் வரும் தண்ணீரை உள்வாங்கி வெளியற்றுவதற்குக் கட்டப்பட்டது இந்த ‘குளோரி ஹோல்’ எனும் துளை. இது விநாடிக்கு சுமார் 1,360 கன மீட்டர் தண்ணீரை விழுங்கும் பிரமாண்ட வடிகால் துளையாகச் செயல்படுகிறது.
இதை கட்டடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒரு நம்பமுடியாத சூழல் போல உருவாக்க வேண்டும் என்று இவ்வாறு வடிவமைத்துள்ளனர். இது பார்ப்பதற்கு தானாக உருவாகும் சுழல் போன்று காட்சித் தருகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த குளோரி ஹோல் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இதை நூற்றுக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.