KGF 2 படத்தை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்… ரசிகர்கள் ஆதரவு..!

கடந்த ஒரு வாரகாலமாக
பீஸ்ட்
மற்றும்
KGF
படத்தைப்பற்றிய பேச்சுதான் போய்க்கொண்டிருக்கிறது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கடுமையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

மறு பக்கம் KGF இரண்டாம் பாகம் வசூலிலும் விமர்சனங்களிலும் கலக்கி கொண்டு வருகின்றது. மேலும் பீஸ்ட் படத்தில் விஜய் அதிக தொகையை சம்பளமாக வாங்கியதால் படத்தின் தரம் சிறப்பாக இல்லையென்றும், தமிழ் சினிமாவை காட்டிலும் மற்ற மொழி திரைப்படங்கள் சிறப்பாக இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மிகப்பிரமாண்டமான படைப்பில் நடிகர் ஜெய்…தரமான சம்பவம் லோடிங்..!

இந்நிலையில் இதனை பிரபல தயாரிப்பாளரான
சி.வி.குமார்
மறுத்துள்ளார். அவர் குறிப்பிட்டது என்னவென்றால், ஒரு முள்ளும் மலரும், கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, ஆடுகளம், இன்று நேற்று நாளை,
மெட்ராஸ்
,
தீரன்
, இறுதிச்சுற்று,
வடசென்னை
, சார்பாட்ட பரம்பரை, ஜெய் பீம், டாணாக்காரன் இன்னும் பல தமிழ் திரைப்படங்களை விட இந்த மாஸ் மசாலா கோலார் தங்க வயல் தான் பெஸ்ட் என்றால் தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா, தயவு செய்து விட்ருங்கப்பா.

KGF ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். ஆனால் எங்கள் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு இணையாக இல்லை என்பது எனது உணர்வு என பதிவிட்டுள்ளார் சி.வி.குமார். இதற்கு பல தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66; விஜய் போட்ட கண்டிஷன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.