கடலை எண்ணெய் என்பது வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தாவர எண்ணெய். பல்வேறு வகையான வேர்க்கடலை எண்ணெய்கள் உள்ளன, மேலும் அவை செயலாக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
இந்தியாவின் தென் பகுதியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வேர்க்கடலை எண்ணெய் பெரும்பாலும் இதயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூட இதை இதய ஆரோக்கியமான எண்ணெய் என்று கருதுகிறது. ஆனால், அதற்கும் ஒரு குறை இருக்கிறது. என்ன என்று தெரிந்துகொள்ள படிக்கவும்.
கடலை எண்ணெய் வகைகள்
ஆய்வுகளின்படி, வேர்க்கடலை எண்ணெயில் நான்கு வகைகள் உள்ளன, இதில் ரீஃபைண்டு வேர்க்கடலை எண்ணெய், கோல்ட் பிரஸ்டு வேர்க்கடலை எண்ணெய், கோர்மெட் வேர்க்கடலை எண்ணெய், கடலை எண்ணெய் கலவைகள் ஆகியவை அடங்கும்.
அவை அனைத்தும் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணெய் அதிக ஸ்மோக் பாயிண்ட் கொண்டுள்ளது, மேலும் வறுத்த உணவுக்கு சரியான தேர்வாக இருக்கும். யுஎஸ்டிஏ படி, ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை எண்ணெயில் 120 கலோரிகள் உள்ளன. எனவே ஒருவர் அதை சமைத்த வடிவில் 2 டேபிள்ஸ்பூன்களுக்கும், மூல வடிவில் 1 டேபிள்ஸ்பூன்களுக்கும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
அதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்
அனைத்து வகையான கடலை எண்ணெயும் நல்லதாகக் கருதப்பட்டாலும், வல்லுனர்களின் கூற்றுப்படி, கோர்மெட் கடலை எண்ணெய்’ சாலடுகள் மற்றும் பச்சையாக உண்ணும் உணவுகளுக்கு நல்லது, ஏனெனில் இது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சிறப்பு எண்ணெயாகவும் கருதப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின் ஈ மற்றும் பைட்டோஸ்டெரால்களை வழங்குகிறது.
அதேநேரம் வறுக்கப்படும் உணவுகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய் நல்லதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது எண்ணெயில் சமைக்கப்படும் மற்ற உணவுகளின் சுவையை உறிஞ்சாது. மேலும், இது அதிக ஸ்மோக் பாயிண்ட் கொண்டுள்ளது, இது உணவின் வெளிப்புறத்தை கிரிஸ்பி ஆகவும், உட்புறத்தை மிகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.
வைட்டமின் ஈ நிறைந்தது
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெயில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளும் வைட்டமின் ஈ-யில் 11 சதவீதம் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து தடுக்கிறது.
இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
இது மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இரண்டிலும் நிறைந்துள்ளது, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, வேர்க்கடலை எண்ணெய் நுகர்வு’ இதய நோய் அபாயத்தை 30 சதவிகிதம் குறைக்க உதவுகிறது.
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது
மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்’ நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் அன்றாட உணவில் கடலை எண்ணெயைச் சேர்ப்பது ஆரோக்கியமான பழக்கமாக கருதப்படுகிறது.
உடல்நல அபாயங்கள்
வேர்க்கடலை எண்ணெயில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை சரியான வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆய்வுகளின்படி, ஒமேகா-3 பல நாள்பட்ட நோய்களை உண்டாக்கக்கூடிய வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது, அதே சமயம் ஒமேகா-5 அழற்சிக்கு மிகவும் சார்பானதாக இருக்கும்.
இப்போதுள்ள உணவில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை விட’ 14-25 மடங்கு அதிக ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர், ஆய்வுகளின்படி, ஒமேகா -6 இன் அதிகப்படியான நுகர்வு பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், வேர்க்கடலையில் ஒவ்வாமை உள்ளவர்கள் கடலை எண்ணெயை எந்த விலையிலும் தவிர்க்க வேண்டும்.
எந்தவொரு உணவுப் பழக்கத்திற்கும் வரும்போது, நிதானம் முக்கியமானது. கடலை எண்ணெய் விஷயத்திலும் இதே விதி பொருந்தும். மேலும், உணவுமுறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் சான்றளிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரை அணுக வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“