அடுத்த தலைமுறைக்கான அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மட் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.
வடக்கு ரஷ்யாவில் உள்ள Plesetsk cosmodrome ஏவுதளத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தி ரஷ்ய ராணுவம் சோதித்து பார்த்தது. சர்மட் ஏவுகணை சாத்தானின் 2வது பாகம் என மேற்கு நாடுகளின் ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் புதின், சர்மட் ஏவுகணையை யாராலும் வெல்ல முடியாது என்றும் உலகின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என்றார்.
தொலைகாட்சியில் பேசிய அதிபர் புதின், தனித்துவமான ஏவுகணை ரஷ்ய ராணுவத்தை வலுப்படுத்தும் என்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இனி இரு முறை யோசிக்க வேண்டும் என்றார்.