அமெரிக்க நாடாளுமன்ற கட்டிட வளாகத்திற்கு மேலாக பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய விமானம் ராணுவ பயிற்சி விமானம் தான் என தெரியவந்துள்ளது.
நேற்று மாலை 6.30 மணியளவில் நாடாளுமன்ற வளாக கட்டிடத்திற்கு மேலாக மர்ம விமானம் பறந்து செல்வதாகவும், அதன் மூலம் ஆபத்து இருப்பதாகவும் கூறி உள்ளே இருந்தவர்கள் அனைவரையும் வெளியேறுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.
அப்போது அங்கு முக்கிய கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த சூழலில் அந்த விமானத்தை ட்ராக் செய்த போது அது ராணுவ பயிற்சி விமானமாக இருந்ததாகவும், அதில் சென்ற கோல்டன் நைட்ஸ் படைப்பிரிவினர் நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து சுமார் 1 மைல் தொலைவில் உள்ள பேஸ்பால் மைதானம் ஒன்றில் பாராசூட் மூலம் தரையிறங்கும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மேரிலாந்து விமானதளத்தில் இருந்து எவ்வித முன் அனுமதியும் பெறாமல் அவர்கள் புறப்பட்டு சென்றதாக விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.