சென்னை: அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். பேரவையில் உரையாற்றிய முதல்வர், தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல தமிழக அரசு முயற்சியை முன்னெடுத்துள்ளது. உலகமே வியக்கும் வகையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட உள்ளது என குறிப்பிட்டார்.