ஆப்கானிஸ்தானில் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ஷியா மசூதி மீதான இந்த தாக்குதல் கடந்த 48 மணி நேரத்தில் ஷியாக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலாகும்.
முஸ்லிம்களின் புனித ரம்ஜான் மாதத்தில் வடக்கு மசார்-இ-ஷெரீப்பில் உள்ள சாய் டோகன் மசூதியில் ஏராளமான பக்தர்கள் முழங்காலிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.