கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் பாராட்டினை தெரிவித்துள்ளது.
இந்தியா அதன் வருடாந்திர பட்ஜெட்டில், பொது முதலீட்டுக்கு முன்னுரிமை அளித்ததற்காக இந்தியாவை பாராட்டியுள்ளது சர்வதேச நாணய நிதியம்.
மேலும் உக்ரைன் போர் பிரச்சனைக்கு மத்தியில் தூண்டப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இடமாற்றங்களை விரிவுபடுத்தவும் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. புதிய உச்சத்தைத் தொட்ட ரிலையன்ஸ்..!
பொருளாதார நெருக்கடி
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் கூட்டத்தில் , ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால் சர்வதேச பொருளாதாரத்தில் அதிகரித்து வரும், சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்த கவலையை எழுப்பிய நிலையில், இது மத்திய ரிசர்வ் வங்கியின் இலக்கினை விடவும் அதிகமாக உள்ளதையும் ஐஎம்எஃப் காட்டியுள்ளது.
விலை உயர்வினை உணரும் காலம்
உணவு பொருட்களின் விலை உயர்வு மற்றும் எரிசக்தி விலைகள் உயர்வின் தாக்கத்தினை குடும்பங்கள் உணரும் காலம் இது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகாரத் துறையின் துணை இயக்குனர் பாலோ மெளரோ கூறியுள்ளார். ஆக நாங்கள் இங்கு பரிந்துரைக்கும் விஷயம் என்னவெனில் உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இடமாற்றங்களையும் விரிவாக்கம் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு என்ன தேவை?
நாட்டிற்கு முக்கிய உள்கட்டமைப்புத் தேவைகள் உள்ளன. உள்கட்டமைப்புக்கான முதலீடுகளில் புதுபிக்கதக்க ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நாங்கள் ஊக்குவிப்போம். ஏனெனில் இந்தியா நிலக்கரியை விட்டு வெளியேறி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையை நோக்கி நகர்வது மிக முக்கியமான ஒன்று. இது மாசுபாட்டையும் குறைக்கும். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்றும் ஐஎம்எஃப்-ன் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகிற்கே நல்ல செய்தி என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, இந்திய பொருளாதார வளர்ச்சி 8.2% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
We will encourage more investment in renewable energy in India’s infrastructure investment. -IMF
We will encourage more investment in renewable energy in India’s infrastructure investment. -IMF/இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு இது தான் சரி.. ஐஎம்எஃப் கூறியது என்ன?