கியா நிறுவனம் இவி6 எனப்படும் மின்சார வாகனத்தை இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதுடன், அதற்கான முன்பதிவை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
பெட்ரோல், டீசல் கார்களை இந்தியாவில் விற்றுவரும் தென்கொரியாவைச் சேர்ந்த கியா நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பிலும் கால் பதித்துள்ளது. இவி6 எனப்படும் மின்சார வாகனத்தை உலக அளவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவிலும் இவி6 மின்சாரக் கார்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நூறு கார்களை மட்டும் முதலில் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான முன்பதிவு மே 26 அன்று தொடங்கும் என்றும் கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.