அகமதாபாத்:
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவுடன் மற்றொரு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என நம்புவதாக கூறினார்.
எதேச்சதிகாரங்களை எதிர்க்கும் ஜனநாயக நாடுகளான இந்தியா – பிரிட்டன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கு ஈடாக, இந்தியாவிற்கு அதிக விசா வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவும் பிரிட்டனும் ஏற்கனவே வலுவான வர்த்தக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. 10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் பல ஆண்டுகளாக பிரிட்டனில் வாழ்கின்றனர்.