இந்தியா – ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமீரக வெளியுறவு வர்த்தகத்துறை அமைச்சர் தனி அல் ஜெயூடி அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பை 60 பில்லியன் டாலரில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் விரிவான பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் 88 நாட்களிலேயே இறுதி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்டதாக அமீரக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே வர்த்தகம் மேற்கொள்ளப்படும் பொருட்களுக்கான சுங்க வரியை குறைக்கவும், வர்த்தக் தடைகளை நீக்கவும் ஒப்பந்தம் வழிவகை செய்வதாக அமீரக வெளியுறவு வர்த்தகத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.