இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் இன்போசிஸ், சமீபத்தில் வேலையை ராஜினாமா செய்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடு ஊழியர்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் காரணத்தால், இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாட்டின் முன்னணி ஐடி ஊழியர்கள் யூனியன் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தங்கம் விலை சரியலாம்.. அடுத்த முக்கிய லெவல் என்ன.. நிபுணர்களின் பலே கணிப்பு..!
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து சமீபத்தில் வெளியேறிய ஊழியர்கள் அனைவருக்கும் புதிதாக ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டியாளர்கள் எனப் பட்டியலிட்டு உள்ள 5 நிறுவனத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளரும் அதாவது Client-ம் போட்டி நிறுவனத்தின் Client-ம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் 6 மாதம் பணியாற்ற தடை விதித்துள்ளது.
NITES யூனியன் புகார்
இப்புதிய விதிகள் மூலம் சமீபத்தில் பணியை ராஜினாமா செய்த ஊழியர்களும், ராஜினாமா செய்யத் திட்டமிடும் ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் இந்தச் செயல்பாடுகளை எதிர்த்து நாட்டின் முன்னணி ஐடி ஊழியர்கள் யூனியன் ஆக விளங்கும் NITES தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் போட்ட கட்டுப்பாடு
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, எந்தக் காரணத்திற்காகவும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எனது வேலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆறு (6) மாதங்களுக்கு
அ. இன்ஃபோசிஸ் உடனான எனது வேலை நிறுத்தத்திற்கு முந்தைய பன்னிரண்டு (12) மாதங்களில் வாடிக்கையாளருடன் நான் தொழில் ரீதியாகப் பணிபுரிந்த எந்தவொரு வாடிக்கையாளரிடமிருந்தும் எந்தவொரு வேலை வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்
பி. இன்போசிஸ் இன் பெயரிடப்பட்ட போட்டியாளரின் வேலை வாய்ப்பை ஏற்கவும், அத்தகைய பெயரிடப்பட்ட போட்டியாளருடன் எனது வேலைவாய்ப்பில் நான் பணிபுரிந்த வாடிக்கையாளருடன் பன்னிரண்டு (12) மாதங்கள் பணிபுரிந்தால், வேலையை ஏற்க மாட்டேன்
எனப் புதிய விதிமுறையை இன்போசிஸ் புகுத்தியுள்ளதாக டார்க் தெரிவித்துள்ளது.
5 போட்டியாளர்கள்
மேலும் இப்போது தனது சக போட்டியாளராக டிசிஎஸ், ஐபிஎம், காக்னிசென்ட், விப்ரோ, அக்சென்சர் ஆகிய நிறுவனங்களைக் குறிப்பிட்டு உள்ளது. இந்தப் புதிய விதிமுறை மூலம் ஊழியர்கள் வெளியேற்றத்தைத் தடுக்கிறது.
80000 ஊழியர்கள்
கடந்த 3 மாதத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 80000 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். இதன் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் இந்தப் புகார் முறையாக விசாரிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் இன்போசிஸ் தோற்றுப்போகும் என பல வழக்கறிஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளது.
Infosys Bans Ex-Employees To Work With TCS, Wipro, Cognizant, IBM, Accenture
Infosys Bans Ex-Employees To Work With TCS, Wipro, Cognizant, IBM, Accenture இன்போசிஸ் புதிய கண்டிஷன்.. ஊழியர்கள் ஷாக்..!!