புடவைக் கைத்தொழில், உள்ளூர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷர்ரப்நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், கிராமிய பொருளாதார பயிர்ச் செய்கை மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.