இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறையாகும் வகையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே மீண்டும் குறித்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.