உக்ரைனுக்கு 100 வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புவதாக நார்வே அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 2 மாதங்களை எட்ட உள்ள நிலையில், நார்வே அரசு உக்ரைனுக்கு ஏற்கனவே பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கின.
இந்நிலையில், பிரான்ஸ் தயாரிப்பான மிஸ்ட்ரல் ரக குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளை வழங்கியிருப்பதாகவும், அவை உக்ரைனுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் நார்வே பாதுகாப்புத்துறை அமைச்சர் போஜோன் அர்லிட் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 4 ஆயிரம் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.