ரஷ்ய படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவும் வகையில் 100க்கும் மேற்பட்ட குவான்டிரிக்ஸ் ரெகான் டிரோன்களை உக்ரைன் ராணுவத்துக்கு வழங்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான ஏரோவிரான்மன்ட் அறிவித்துள்ளது.
வரும் வார இறுதிக்குள் 50 சதவீத டிரோன்கள் அனுப்பப்பட்டு விடும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இலகுரகமான இந்த டிரோன் தரையில் இருந்து செங்குத்தாக வேகமாக மேல் எழும்பி பறந்து சென்று உளவு பார்க்கும் திறன் கொண்டது.
டிரோன்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்தற்கான பயிற்சியும் உக்ரைன் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று ஏரோவிரான்மன்ட் நிறுவனத்தின் சிஇஒ வாகித் தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகளை கொண்டு சென்று ரஷ்ய படைகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தக்கூடிய டிரோன்களையும் உக்ரைனுக்கு ஏரோவிரான்மன்ட் நிறுவனம் வழங்கி உள்ளது.