உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று (21) காலை பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று, இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில், கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதில் 200 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.