பெங்களூரு:கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஏழு ஆண்டுகளில், ஏப்ரல் மாதத்தில் 134 மி.மீ., மழை பெய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இம்மாதத்தில் 41 மி.மீ., மழையே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கன மழையால், கடுமையான வெப்பத்தில் இருந்து பெங்களூரு நகரின் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. கோடை காலத்தில் மழை பெய்து வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிம்மதியை தந்த வேளையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, சேதம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெங்களூரிலுள்ள வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளதாவது:ஜே.பி.நகர், கோரமங்களா மற்றும் ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.கர்நாடகா தலைநகர் இம்மாதம் ஒரு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இம்மாதம் மொத்தம் 134 மி.மீ., மழை பெய்துள்ளது.
இது ஏழு ஆண்டுகளில் இல்லாத ஈரமான ஏப்ரல் மாதமாகும். இதற்கு முன் ஏப்ரல் மாதத்தில் சராசரி மழையளவு 41.5 மி.மீ., மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.மழை பெய்யும் என, ஏற்கனவே ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தயாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement