2022 ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஏப்ரல் 30 திகதி நிகழவிருக்கிறது.
இந்த முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 12.15 மணியில் இருந்து மாலை 04.07 மணி வரை நிகழும்.
எனவே ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசிகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். கிரகண காலத்தில் பணம் தொடர்பான எந்த வேலைகளையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பெரும் பிரச்சனையில் சிக்கி தவிக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! சூரிய கிரகண நாளில் உங்களின் தன்னம்பிக்கை குறையும். மேலும் இந்நாளில் தேவையற்ற கோபம் அல்லது மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளன்று கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் அசைவுகளை கூர்ந்து கண்காணியுங்கள். மொத்தத்தில் கவனமாக இருங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகண தினம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் இந்நாளில் நீங்கும். இதுமட்டுமின்றி, நிதி தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஆண்டின் முதல் சூரிய கிரகண நாளன்று உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல பணம் கிடைக்கும். ஆனாலும், இந்நாளில் எந்தவொரு நிதி முதலீட்டையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகண நாளில் கன்னி ராசிக்காரர்கள் வெற்றி பெறுவதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது மட்டுமின்றி, இந்நாளில் உங்கள் வேலையையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சற்று மோசமானதாகவே இருக்கும். கிரகண நாளன்று உங்கள் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். மேலும் இந்நாளில் சட்ட மோதல்களைத் தவிர்த்திடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளன்று உத்தியோகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, வியாபாரத்திலும் நி தி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! சூரிய கிரகண நாளில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்நாளில் அதீத நம்பிக்கையை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்நாளன்று உங்கள் இயல்பை மென்மையாக வைத்திருங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! சூரிய கிரகண நாளன்று உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதோடு, பந்தயம் மற்றும் சூதாட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் முதலீட்டில் நஷ்டத்தை சந்திக்கலாம். குடும்ப தகராறால் சற்று மன வருத்தத்தில் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் பேச்சினால் வருத்தம் கொள்ளலாம். எவ்விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பொறுமையாக இருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தில் செய்யப்படும் நிதி முதலீட்டினால் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.