மும்பை:
ஐபிஎல், தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வைபவ் அரோரா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் அக்சர், குல்தீப், லலித், கலீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முஸ்டாபிசுர் 1 விக்கெட் கைப்பற்றினார். அக்சர் 4 ஓவரில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 10.3 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோத உள்ளன