கனா காணும் காலங்கள் வெப் தொடர் : நாளை வெளியாகிறது

2000ம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற தொடர் “கனா காணும் காலங்கள்”. புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் இதுவும் ஒன்று. இதில் நடித்த பலர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த தொடர் புதியவர்களின் நடிப்பில் வெப் சீரிசாக தயாராகி உள்ளது. இந்த வெப் சீரிஸ் நாளை (ஏப்ரல் 22) முதல் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் சக்திவேல், 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட பள்ளியை இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை திறக்க உற்சாகமாக இருக்கிறார்.

ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பு வருகிறது. இந்த சவாலை ஆசிரியர் சக்திவேலும் மாணவர்களும் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் தொடரின் கதை.

தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுகங்களுடன் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.