மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, முந்தைய அதிமுக அரசு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசு சார்பில் 1 பவுன் தங்கம் மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 ஆயிரமும், 12ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை தாலிக்கு தங்கம் திட்டம் என்று அழைக்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்காமல் கைவிட்டது. மேலும், கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமக கறவை மாடு வழங்குதல், நாட்டுக்கோழி வழங்குதல் ஆகிய அதிமுக அரசின் மேலும் 2 திட்டங்களை திமுக அரசு நிறுத்திவைக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு 2022ம் ஆண்டில் கறவை மாடுகள் மற்றும் நாட்டுக் கோழிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது. மேலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த, கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செம்மறி ஆடுகளை வழங்கு திட்டத்தையும் தமிழக அரசு கடுமையாக கட்டுப்படுத்துகிறது.
முந்தைய அதிமுக அரசால் தொடங்கப்பட்டு கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த 3 திட்டங்கள் மூலம், 2012 முதல் ஆண்டுக்கு சுமார் 2.4 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. மாநில அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது மூன்று திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் ரூ.200 கோடி குறைக்கப்பட்டுள்ளது. .
நிலமற்ற அனைத்து கிராமப்புற பெண்களுக்கும் இலவச ஆடு/செம்மறி ஆடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகளை மாநில அரசு குறைக்கிறது. அதே நேரத்தில், சந்தையில் இருந்து ஆடுகளை வாங்குவதை விட சொந்தமாக நிறுவனங்கள் மூலம் ஆடு வளர்க்க செய்வதன் மூலம் நாட்டுக்கோழிகளை வழங்கும் திட்டத்தின்செலவைக் குறைக்க முயற்சிக்கிறது.
முந்தைய அதிமுக அரசு 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 12,000 கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தியாளர்கள் 100% மானியத்தில் மாடுகளைப் பெற்றனர். கால்நடை பராமரிப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த ஆண்டு, அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இத்திட்டம் ஆண்டுக்கு ரூ.43-45 கோடி ஒதுக்கீடு பெற்றது. சந்தை விலையில் 30,000 ரூபாய்க்கு மாடுகள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் விவசாயிகள் கறவை மாடுகளை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்.
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு ரூ.14.2 கோடி
2011-12ல் இருந்து ஆண்டுக்கு 1.5 லட்சம் நிலமில்லாத கிராமப்புறப் பெண்களுக்கு செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கப்பட்டது. 2021-22ல் கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கிராமப்புறங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இத்திட்டத்தைப் பெற முடியும். இதன் விளைவாக, 2021-22ல், இத்திட்டத்தின் கீழ் 38,800 பயனாளிகள் கண்டறியப்பட்டு, ரூ.75.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
“பயனாளிக்கு இலவசமாக 4 செம்மறி ஆடுகள் வழங்குவதற்கு பதிலாக 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும்” என்று அரசாணை வெளியிடப்பட்டது. 2012-13-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்டுக் கோழிகள் இலவசமாக விநியோகிக்கும் திட்டம் கிராமப்புறங்களில் வீட்டிலேயே கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், 75,000 முதல் 77,000 பெண்கள் வளர்ப்பதற்காக 25 நாட்டுக் கோழி குஞ்சுகளைப் பெற்றனர். 2018-19ல், இத்திட்டம் டவுன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு பயனாளிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 2.4 லட்சமாக உயர்த்தியது. அந்த ஆண்டு, இத்திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டுக் கோழிக் குஞ்சுகளை சந்தையில் இருந்து கொள்முதல் செய்யும் நடைமுறையை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலாக கோழிக் குஞ்சுகள், மாநிலத்திலேயே இனப்பெருக்க வளாகங்களில் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் விநியோகிக்க பரிசீலிக்கப்படும். சிவகங்கையில் உள்ள மாவட்ட கால்நடை வளாகத்தில், ஆண்டுக்கு நான்கு லட்சம் கோழிக் குஞ்சுகள் வழங்கும் நாட்டுக் கோழி வளர்ப்பு வளாகம் அமைக்க, 14.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருநெல்வேலியில் ஆண்டுக்கு 5 லட்சம் நாட்டுக் கோழிக் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இதேபோன்ற வசதியை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“