மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக திகழ்பவர் கேஎல் ராகுல். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் லக்னோ அணியை வழிநடத்தி வருகிறார். இவரும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் பல நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.
அதியா ஷெட்டி, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுனில் ஷெட்டியின் மகளாவார். கிரிக்கெட் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட இவர் நடப்பு தொடரில் ராகுல் விளையாடும் லக்னோ அணியின் போட்டிகளை ஒன்று விடாமல் மைதானத்திற்கு வந்து பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சென்னை பெண்ணை சென்னையில் திருமணம் செய்துகொண்ட மேக்ஸ்வெல் தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார்.
அவரை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கான்வே நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்து. அதுபோல பாலிவுட் பிரபலங்கள், ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இந்த வருடமே திருமணம் செய்துகொள்ள போகும் அடுத்த பிரபல ஜோடியாக கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி இருப்பார்கள் என்று தெரிகிறது.