சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் நடத்திய ஐந்தரை மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. சசிகலாவிடம் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை ஐ.ஜி. சுதாகர், நீலகிரி எஸ்.பி. ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் வாங்கியது எப்போது? அங்கு எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? என்பது உள்பட சசிகலாவிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.