இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் போரிஸ் ஜான்சன் நூல் நூற்றி சுற்றி மகிழ்ந்தார்.
தொடர்ந்து, மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான ‘தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்’ என்ற புத்தகம் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய ‘கைட் டூ லண்டன்’ என்ற புத்தகத்தை போரிஸ் ஜான்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, சபர்மதி ஆசிரமத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தி குறிப்பு ஒன்றை எழுதினார்.
அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:-
இந்த அசாதாரண மனிதரின் ஆசிரமத்திற்கு வருகை தந்தது, உலகை சிறப்பாக மாற்றுவதற்கு, உண்மை மற்றும் அகிம்சை போன்ற எளிய கொள்கைகளை அவர் எவ்வாறு அணி திரட்டினார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு மகத்தான பாக்கியமாக அமைந்தது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்..
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு அகமதாபாத்தில் சிறப்பு வரவேற்பு