சென்னை இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்!

Chennai Parthasarathy temple recruitment 2022 apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி மின்பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : மின் அல்லது மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  

சம்பளம் : ரூ. 16,600 – 52,400

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

கடைநிலை ஊழியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

திருவிலகு

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

உதவி கைங்கர்யம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

சன்னதி தீவட்டி

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் தீவட்டி பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

உதவி பரிச்சாரகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

இதையும் படியுங்கள்: சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கால்நடை பராமரிப்பு

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி : 01.04.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5&action=contact_us என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை – 5

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.