தமிழ்நாட்டில் இன்று 18,816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த கொரோனா தொற்று இந்த வாரம் சற்று அதிகரித்து காணப்படுகிறது பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது.
சென்னையில் இன்று 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 10 மாவட்டங்களில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டில் 6 பேருக்கும், வேலூர் மற்றும் தஞ்சாவூரில் தலா 2 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், நாமக்கல், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.