திருமலை: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 15 வகையான பஞ்ச கவ்ய பொருட்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. இவற்றை தனியார் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இணை செயலதிகாரி வீரபிரம்மன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது வீரபிரம்மன் ேபசியதாவது:திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்படும் 15 வகையான பஞ்ச கவ்ய பொருட்களை தவிர, கோயிலில் சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களால் தயாரித்த அகர்பத்தி போன்ற பொருட்களுக்கு பக்தர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பொருட்கள் நாடு முழுவதும் அதிகளவு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஆன்லைன் வர்த்தகத்தில் இப்பொருட்கள் விற்கப்படும். எனவே ஆன்லைன் வணிகத்தில் பக்தர்களுக்கு அதிகளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.