சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிம்.எம்.டி.ஏ) சென்னையைச் சுற்றியுள்ள திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களைத் சாட்டிலைட் நகரங்களாக மேம்படுத்தி, புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து, சிறந்த இணைப்புக்காக இந்த வழித்தடங்களில் சாலைகள் அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி புதன்கிழமை வெளியிட்டார்.
பெருநகர சென்னை பகுதியின் (சிஎம்ஏ) விரிவாக்கத்திற்கான இரண்டாவது பெருந்திட்டத்தின்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் தாலுகாவில் 5,094 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய பகுதிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. முன்மொழியப்பட்ட விரிவாக்கம் ஏற்கனவே 8,889 சதுர கிலோமீட்டரில் இருந்து குறைக்கப்பட்டது என்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு, விரிவாக்கத்தைவிட நகரத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதால் அந்த பரப்பு மேலும் குறையக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
வளர்ச்சியடையாத பகுதிகளில் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக சி.எம்.ஏ.வில் உள்ள 196 வருவாய் கிராமங்களுக்கான சாலைத் திட்டத்தை சி.எம்.டி.ஏ ஏற்கனவே தயாரித்துள்ளது.
திருமழிசையில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய 311 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மேம்படுத்தும் பணி ஏற்கனவே நடந்து வருகிறது. ஏற்கெனவே, அங்கே ரூ.245 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக, மனை, வீடு, மனைகள் எடுக்கப்படும் என, கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா கூறுகையில், திட்ட ஆணையம் இந்த நகரங்களை தன்னிறைவு அடையச் செய்து, மாஸ்டர் பிளான்களைத் தயாரித்து, சாலைகளின் கட்டத்தை உருவாக்கி, நிலத்தை குவிக்கும் திட்டங்கள் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களை வெளியிடுவதன் மூலம் தொடங்கி வைப்பதாக செயல்படும் என்று கூறினார்.
சென்னையைச் சுற்றியுள்ள திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களைத் சாட்டிலைட் நகரங்களாக மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, திருமழிசை அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“