துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 24-ந்தேதி பெங்களூரு வருகை

பெங்களூரு:

கர்நாடக விளையாட்டுத்துறை சார்பில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் வருகிற 24-ந்தேதி பெங்களூருவில் உள்ள கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் தொடங்குகின்றன. இதற்கான தொடக்க விழா அன்றைய தினம் நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. நாடு முழுவதும் 190 பல்கலைக்கழகங்களில் இருந்து 4,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இதில் 20 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பெங்களூருவில் கொரோனா பரவலுக்கு பிறகு பெரிய அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.