தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழக அரசு மழை நீர் வடிகால், அரசு திட்டப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் பல மாவட்டங்களிலும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள இருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளையும், துறை ரீதியான திட்டங்களையும் ஆய்வு செய்கிறார்.
இதற்காக வரும் 30-ம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
இதையும் படியுங்கள்..
கோவையை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு