கே.ஜி.எஃப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் யஷ், கே.ஜி.எஃப் படத்தின் பாணியில் மாஸான குட்டி ஸ்டோரி ஒன்றைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சிறிய கிராமம் ஒன்று நீண்ட நாளாக பஞ்சத்தை சந்தித்து வந்தது. அங்கிருந்த மக்கள் பஞ்சத்தை சரிசெய்ய பிரார்த்தனை செய்வதற்காக ஒன்று கூடினார்கள். ஒரு சின்ன பையன் மட்டும் தனியாக மழை வரும் என்று குடையுடன் சூரியனுக்கு கீழ் நின்றிருந்தான். அதை பைத்தியக்காரத்தனம் என்றும் நினைக்கலாம், அதீத நம்பிக்கை என்றும் நினைக்கலாம். அந்தச் சிறுவனைப் போல்தான் நானும் நம்பிக்கைக் கொண்டிருந்தேன்.
இந்தச் சமயத்தில் நன்றி மட்டும் சொன்னால் அது போதாது. என் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கும் ஆசிர்வாதங்களுக்கும் என் இதயத்திலிருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். அதே சமயம் ‘கே.ஜி.எஃப்’ குழுவின் அனைவரும் இணைந்து உங்களுக்கு நல்ல திரைப்பட அனுபவத்தைக் கொடுத்துள்ளோம் என்று நம்புகிறோம். அதை நீங்கள் கொண்டாடினீர்கள், தொடர்ந்து கொண்டாடுங்கள். நீங்கள் எல்லோரும் என் நெஞ்சில் குடியிருக்கிறீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.