நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களின் செயல்பாடு துவக்கம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

2021-2022ஆம் ஆண்டுக்கான நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையில், பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 6 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் 5 கார்கள், 80 ஜீப்புகள்  வாங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 10 வாகனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.