மேற்கு வங்கத்தை அடுத்த சுந்தரவனக்காடுகளில் வனப்பகுதியில் வனத்துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட புலி ஒன்று மீண்டும் காட்டுக்கு படகில் கொண்டு செல்லப்பட்டது.
கரையருகே அதன் கூண்டு திறக்கப்பட்டதும் அது தண்ணீரில் குதித்து பாய்ந்தோடி கரைக்கு நீந்தி செல்லும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. .
வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் வெளியிட்ட இந்த வீடியோவில் புலி தனது உடல் பலத்தால் இரண்டே நிமிடத்தில் தண்ணீரில் நீந்தி கரையைத் தொட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காட்சி லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களின் பரவலான கவனம் பெற்று வருகிறது.