இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள பாக்., மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி, லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீபை சந்தித்து பேச அந்நாட்டுக்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோல்வி அடைந்தார். இதையடுத்து நவாஸ் ஷெரீபின் பாக்., முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.இவரது கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சியான பாக்., மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி, புதிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அமைச்சர் பொறுப்பை ஏற்கவில்லை.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பாக்., முஸ்லிம் லீக் மூத்த தலைவர் நவாஸ் ஷெரீபை சந்திக்க, பிலாவல் புட்டோ லண்டன் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இடையிலான கருத்து வேறுபாடு மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் நிலை குறித்து நவாசுடன் விவாதிக்க அவர் செல்வதாக கூறப்படுகிறது.
Advertisement